என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலை சீரமைப்பு"
- மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
- பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.
பொன்னேரி:
பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.
இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.
இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
- ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் முதல் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
- இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள சர்வீஸ் சாலை மற்றும் பாலஜங்கமனஹள்ளி, நாகர்கூடல் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளது.
இச்சாலையில் தினந்தோறும் அதிக அளவில் பள்ளி , கல்லூரி வாகனங்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் முதல் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியதால் அதில் நீந்தியவாறு வாகனங்கள் சென்றன .
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் தற்போது பருவமழை காலம் தொடங்கவுள்ளதால் அதற்கு முன்பாக சாலையை சீரமைக்கும் பொருட்டு சாலையில் தொடர் சேதத்தை தடுக்கும் பொருட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
- அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- ரூ.1 கோடியே 3 லட்சம் செலவில் நடைபெறுகிறது
மார்த்தாண்டம், ஜூன்.8-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல் பேரூராட்சியில் உள்ள காக்கவிளை- பஞ்சந்தாங்கி செல்லும் சாலை பல வருடங்களாக செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுத டைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாக னங்களில் செல்வதற்கும் முடியாத நிலையில் அவதிப் பட்டனர். இதனால் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து காக்கவிளை- பஞ்சந்தாங்கி செல்லும் சாலையை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.
இதனையடுத்து நபார்டு சாலைகள் அலகின் மூலம் சாலை தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் காக்க விளை-பஞ்சந்தாங்கி சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த சாலை சீரமைக்கும் பணியை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் சிவராஜ், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.பி. ராஜன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், கருங்கல் பேரூராட்சி காங்கி ரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தி.மு.க. செயலாளர் அருள் ராஜ், வார்டு உறுப்பினர் ஜோபின் சிறில் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
- சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும்
விருதுநகர்
சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முதல் டவுன் போலீஸ் நிலையம் முன்பு வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிவு செய்து நெடுஞ்சாலை துறையிடம் தடையின்மை சான்று வழங்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சாத்தூர் உதவி நிர்வாக பொறியாளர் அவர்கள் தெரிவித்தார்.
மேற்படி தடையின்மைச் சான்று கிடைக்கப்பெற்று பணி தொடங்கும் வரை சாலையில் தூசி பறக்காமல் இருப்பதற்கு காலை மாலை இரு நேரங்களிலும் சாலை யில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் வட்டாட்சியர், அது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர், சாத்தூர் நகர் சார்பு ஆய்வா ளர், சாத்தூர் குறுவட்ட வருவாய் ஆய்வா ளர் மற்றும் சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் கலந்து ெகாண்டனர்.
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக், மாவட்டச் செயலாளர் சந்திரன், மேற்கு வட்டார துணைத் தலைவர் முத்துவேல், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேசுவரன், தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை போடப்பட்டது.
- தரமில்லாத சாலையை அமைத்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட காம்பைக்கடை ஹாப்பிவெலி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை போடப்பட்டது. தரமின்றி போடப்பட்ட சிமெண்டு சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் அந்த சாலையை மீண்டும் மறு சீரமைப்பு செய்து தர வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.
இதனையடுத்து சாலை மறு சீரமைப்பு குறித்து மாலைமலர் செய்தி நாளிதழில் கடந்த 7-ந் தெதி செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் கோத்தகிரி பகுதிகளில் வைரலாகியது. உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரரை அழைத்து தரமில்லாத சாலையை அமைத்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
பின்பு அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்ட அந்த சாலையை மறு சீரமைத்து தர அந்த ஒப்பந்ததாரரிடம் உத்தரவு பிறப்பித்தனர். அதன் விளைவாக இன்று அந்த சாலையை சீர் செய்தனர். செய்தி வெளியிட்டு சாலையை சீரமைத்து தந்ததற்காக அப்பகுதி மக்கள் மாலைமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
- பாலமேடு அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் நடத்தினர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி-ராஜக்காள்பட்டி செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்தப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த வழியாக குவாரி களுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது சாலையோரமாக குடியிருப்போர் வீடுகள் முழுவதும் புழுதி பரவி காற்று மாசு ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
ழைக்காலங்களில் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமான சாலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வாகனங்கள் செல்லும்போது வீடுகளுக்குள் அதிகளவில் புழுதி பறக்கிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புழுதி பறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புழுதி காரணமாக குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் இன்று 2-வது கட்டமாக போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.
கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது பற்றி தெரியவந்ததும், பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது,
- சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுவதாக தெரிகிறது,
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை சுமார் 2 கி.மீ சாலை சமீபத்தில் பெய்த மழையினால் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதோடு ஜல்லிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அவ்வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சைக்கிளில் செல் வோர் அடிக்கடி கீழே விழுந்து செல்வதாகக் கூறுகின்றனர். இவ்வழியாக கால்நடைகள் அதிக அளவில் சென்று வருவதால் அவைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழம்பூண்டி கூட்டு சாலையிலிருந்து பறையந்தாங்கல் வரை உள்ள சாலையை சீரமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் மாணவன் ஈடுபட்டான்.
- மாணவனின் செயலை பார்த்த வாகன ஓட்டிகள் சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலையில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்ல ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
கடந்த 7 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சாலை பள்ளத்தில் விழுந்து ரத்தக் காயங்களுடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). தனது மோட்டார் சைக்கிளில் இந்த சாலையில் சென்ற போது பள்ளத்தில் விழுந்த போது பிரேக் போட்டுள்ளார்.
அப்போது பின்பக்கம் வந்த மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேகரின் பேரன் மாசிலாமணி (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தனது தாத்தா போல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி இன்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான்.
எத்தனையோ பணக்காரர்கள், அரசியல்வாதிகள் சென்றுவரும் இந்த சாலையில் ஒரு சிறுவன் தனி ஆளாக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார்.
மாணவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.
- சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
- உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதில் தினமும் தூய்மை படுத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் குமார், ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜாராமன் செயல் அறிக்கை வாசித்தார். இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சி யில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்த லைவர் சௌந்தர ராஜன், ஆலங்காடு பள்ளி தலைவர் கோபி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.
- சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டு வீரபாண்டி பேருந்து நிலையத்திலிருந்து மீனம்பாறை வழியாக அவரப்பாளையம் செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மேலும் அவரப்பாளையத்தில்எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இந்த சாலையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேலூர் புலிப்பட்டி-வெள்ளிமலை சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
- னியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் யூனியனைச் சேர்ந்தது புலிப்பட்டி ஊராட்சி. இதனை அடுத்துள்ளது வெள்ளிமலைபட்டி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்கிருந்து வள்ளா ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் மற்றும் மேலூர் பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் ரோடு சிதிலமடைந்து ஜல்லி கற்களாக பெயர்ந்து கிடக்கிறது.
வெள்ளிமலை பட்டிக்கு தினசரி மேலூரில் இருந்து அரசு டவுன் பஸ் 3 முறை இயக்கப்படுகிறது. தற்போது ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதேபோல் இருசக்கர வாகனங்களை இயக்கவே முடியவில்லை. மேலும் அவசர சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
மேலும் புலிப்பட்டி ஊராட்சியில் தெருக்களில் சாக்கடைகள் ரோடுகளில் ஆங்காங்கே செல்கின்றன. இதனால் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு அடிப்படை தேவைகளை உடனடியாக மேலூர் யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்